தமிழக செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த கேமராமேன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சென்னை,

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில், தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்த போது புகைப்பட கலைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து