தமிழக செய்திகள்

தேனி அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்

தேனி அருகே கஞ்சா விற்றவர் சிக்கினார்

தினத்தந்தி

தேனி அருகே கோடாங்கிபட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சிலம்பரசன் (வயது 33), அவரது தம்பி பிரதீப் (27) ஆகியோர் கஞ்சா பொட்டலம் போட்டு விற்பனை செய்தனர். போலீசாரை பார்த்ததும் பிரதீப் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், கஞ்சா விற்ற ரூ.36 ஆயிரத்து 200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது