தமிழக செய்திகள்

சரக்கு லாரி கவிழ்ந்தது; டிரைவர் காயம்

சரக்கு லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார்.

தினத்தந்தி

மதுரையில் இருந்து சென்னைக்கு பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. லாரியை சீர்காழியை சேர்ந்த பரமசிவம் (வயது 52) ஓட்டினார். மதுரை பைபாஸ் சாலையில் எடமலைப்பட்டிபுதூர் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, லாரி நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. டிரைவர் பரமசிவம் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தார். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடி சென்று அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து