தமிழக செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்

பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு தாலுகா அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமம் அருகே டிராக்டர் ஒன்று மரக்கட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் அதிவேகமாக வந்த ஒரு சரக்கு வேன் டிராக்டரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நசுங்கியது.

இந்த விபத்தில் சரக்கு வேனை ஓட்டி வந்த ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காத்தரை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 48) என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் எஸ்.ஆர்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த டிரைவரை சிகிச்சைக்காக சித தூரரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து