உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வைரிசெட்டிப்பாளையம் கல்விநகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 35). அப்பகுதியில் நடந்து சென்றபோது இவரும் எதிரே வந்த அதே ஊரை சேர்ந்த சுரேந்தரும்(32) மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் சுரேந்தர் கையில் இருந்த கண்ணாடி பாட்டிலால் குத்தியதில் விஜயகுமார் நெஞ்சில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.