தமிழக செய்திகள்

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

‘பேஸ்புக்’ மூலம் பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தேவதானப்பட்டி போலீசில் 24 வயது இளம்பெண் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் நான் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். அப்போது 'பேஸ்புக்' மூலம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (வயது 26) என்பவர் எனக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் பேசி நெருங்கி பழகி வந்தோம். இந்நிலையில் நான் கர்ப்பமானேன்.

இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கப்பாண்டியிடம் கூறினன். அதற்கு அவர் எனது கணவரிடம் விவாகரத்து வாங்கிய உடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி எனக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த விவரத்தினை தங்கப்பாண்டியின் தாய் மீரா, அக்காள் காயத்ரி, அண்ணன் ராம்பாண்டி ஆகியோரிடம் போனில் தெரிவித்தேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் தங்கப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்