கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

இந்த ஆலோசனை கூட்டம் பனையூரில் தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

த.வெ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சி சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ்' தளப் பக்கத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டிருந்த பதிவில், த.வெ.க. தலைவர் அறிவுறுத்தலின்படி, 11-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலைய செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சமீபத்தில் கட்சியில் இணைந்த த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து