தமிழக செய்திகள்

கொளப்பாக்கத்தில் மின்னல் தாக்கி குடிசை வீடு தீப்பிடித்து சேதம்

கொளப்பாக்கத்தில் மின்னல் தாக்கி குடிசை வீடு தீப்பிடித்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது கொளப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த விமலா (வயது 53), என்பவரின் வீட்டின் தென்னை மரம் அருகில் இருந்த குடிசை வீடு மீது இடி, மின்னல் தாக்கியது.

இடி சத்தம் கேட்டவுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த விமலா அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டார். இதில் தென்னை மரம், குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை