தமிழக செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி ஊராட்சி வடக்குப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்த 5 வயதுடைய கறவை பசு ஒன்று 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுவை தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து