தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் அமைந்துள்ளது. விடுமுறை தினம், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளிமாநிலம், மாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பத்தினருடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்