தமிழக செய்திகள்

சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு பஸ் நிலையத்தில் திரண்ட பயணிகள் கூட்டம்

சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு பஸ் நிலையத்தில் திரண்ட பயணிகள் கூட்டம்.

தினத்தந்தி

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இந்தாண்டு கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 1-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும் கோடை வெப்பம் சற்றும் தணியாத நிலையில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு, 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பஸ் நிலையத்தில் கூட்டம்

இந்தநிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் கோடை விடுமுறையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்று இருந்தவர்களும், கடைசி நேரத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்களும் நேற்று அவசர, அவசரமாக ஊருக்கு திரும்பினர். இதன் காரணமாக நேற்று இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்சியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர். இதேபோல் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதிகளில் நேற்று இரவு சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்