தமிழக செய்திகள்

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் என்பதை 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளிவைக்கப்படுமே தவிர, தேர்வுகள் ரத்து செய்யப்படமாட்டாது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். 12-ம் வகுப்பைப் பொருதத்தவரை நடப்பு கல்வியாண்டில் பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை.

தனியார் பள்ளிகளில் ஓடாத பஸ், போடாத சீருடைக்கு கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசுலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்