தமிழக செய்திகள்

ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி சாவு

சீர்காழியில் ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி அருகே ஆத்துக்குடி ஊராட்சி மேலாத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 44). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று சதாசிவம் தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்ற ஜீப் எதிர்பாராமல் சதாசிவத்தின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சதாசிவம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சதாசிவம் மனைவி கஸ்தூரி (வயது 40) வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து