தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் நேரடியாக அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு