தமிழக செய்திகள்

காலாவதியான மருந்தை விற்ற உர வியாபாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம்

காலாவதியான மருந்தை விற்ற உர வியாபாரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில் தெளிக்க 100 மில்லி களைக்கொல்லி மருந்தை காஞ்சீபுரத்தில் உள்ள உரக்கடையில் கடந்த 3-12 -2019 அன்று ரூ.1,300 கொடுத்து வாங்கினார். இந்த 100 மில்லி களைக்கொல்லி மருந்தை 2 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். வழக்கம் போல களைகளை அழிக்க மேற்கண்ட மருந்தை தெளித்த போது சில நாட்களில் களைகள் அழியாமல் பதிலுக்கு நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பயிரில் தெளித்த களைக்கொல்லி மருந்து பாட்டிலை எடுத்து பார்த்தார். அந்த பாட்டிலில் அச்சடிக்கப்பட்டிருந்த தேதியை பார்த்தபோது அந்த மருந்து கலாவதியானது என்பது தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட கடையில் இது குறித்து கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் 30-12-2022 அன்று வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர் ஜவஹர் ஆகியோர் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.1 லட்சம் என 2 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி உரக்கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை