தமிழக செய்திகள்

காட்டுபன்றி இறைச்சியை விற்ற வாலிபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

காட்டுபன்றி இறைச்சியை விற்ற வாலிபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திருவண்ணாமலை கண்ணமட காப்புக்காட்டு பகுதியில் காட்டுபன்றியை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை வன சரக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனசரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் கண்ணமட காப்புக்காட்டு பகுதியில் சேதனை நடத்தினர்.

அப்போது அல்லிக்கொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜோனஸ் (வயது 27) என்பவர் காட்டுபன்றி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 கிலோ காட்டுபன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு