தமிழக செய்திகள்

சென்னை அண்ணாசாலையில் ஜெராக்ஸ் மிஷின் விற்பனைக் கடையில் தீ விபத்து

தீ விபத்து காரணமாக அண்ணாசாலை பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவியது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நந்தனம் அண்ணாசாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஜெராக்ஸ் மிஷின்கள் விற்பனைக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் நிலவியது. அருகில் பெட்ரோல் நிலையம், இருசக்கர வாகன ஷோரும் உள்ளிட்டவை இருந்த நிலையில், தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை