தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு தெர்மாகோல் மொத்தமாக வாங்கி சேமித்து தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த குடோனில் இருந்து கரும் புகை கிளம்பியது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது குடோன் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, ஒரகடம் உளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது தெரியவந்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்