தமிழக செய்திகள்

நகராட்சி அலுவலக குடோனில் தீ விபத்து

திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

தினத்தந்தி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் செவலை சாலையில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சியின் துப்புரவு பிரிவுக்கான சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் நிலைய தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இ்நத தீ விபத்தில் பிளீச்சிங் பவுடர், பினாயில், கொசு மருந்து மற்றும் கொசு மருந்து அடிக்கும் எந்திரம் ஆகியவை எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம்இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஆணையாளர் கீதா, துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் கவுன்சிலர்கள் தீ விபத்து நடந்த குடோனை பார்வையிட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து