தமிழக செய்திகள்

சரக்கு ரெயில் தடம் புரண்டது

அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டு பகுதியில் இருந்து கார்கள் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் 24 காலி பெட்டிகளுடன் ரெயில் நிலைய பகுதிக்கு வந்தது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது. இதை அறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரக்கோணத்தில் இருந்து மாலை 5 மணிக்கு திருத்தணி செல்லக்கூடிய புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும், சரக்கு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்