தமிழக செய்திகள்

எரிபொருள் நிரப்ப சென்னையில் தரை இறங்கிய பிரான்ஸ் நாட்டு விமானப்படை போர் விமானம்

எரிபொருள் நிரப்ப பிரான்ஸ் நாட்டு விமானப்படை போ விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

தினத்தந்தி

பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானம், மணிக்கு 880 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது. இது ஏர்பஸ் நிறுவனத்தின் 'ஏ-400 எம்.அட்லஸ்' என்ற வகையைச் சேர்ந்தது. இந்த விமானம் ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது. வானிலே பறந்தபடி மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் திறன் உடையது. முறையான விமான ஓடுபாதை இல்லாத இடத்தில் கூட இந்த விமானத்தை தரையிறக்க முடியும்.

கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியும். மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும் இந்த விமானம் பயன்படுத்தக்கூடியது.

இந்தநிலையில் பிரான்ஸ் நாட்டு விமானப்படை போ விமானம் சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி சென்றது. விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டியது இருந்ததால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின் பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானம் அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு