தமிழக செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 39). இவர் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பத்மாவதி தன்னுடன் பணிபுரியும் துர்கா தேவி என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மப்பேடு நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அவர்கள் சத்தரை கண்டிக்கை அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பத்மாவதி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பற்றி இழுத்தனர்.

இதனால் பதறிப்போன அவர் தங்க சங்கிலியை இறுக்க பற்றிக்கொண்டார். எனவே தங்க சங்கிலி இரண்டாக அறுந்து ஒரு பகுதி பத்மாவதி கையிலும், மற்றொரு பகுதி கொள்ளையர்கள் கையிலும் சிக்கியது. பின்னர் அந்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து வேகமாக சென்று தப்பினர். இது குறித்து பத்மாவதி மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை