தமிழக செய்திகள்

வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா - மு.க.ஸ்டாலின்

குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா!

இதுவரையில் இல்லாத அளவிற்கு 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குமரி மாவட்ட மீனவர்களுக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன்.

இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் வள்ளுவ முனையில் திராவிட மாடல் 2.0-இன் தொடக்கத்துக்கான அடித்தளம் அமைந்தது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.