தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன், குற்றவாளி கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு