தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த லாரி கிளீனர் பலி

மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்த லாரி கிளீனர் நீரில் மூழ்கி பலியானார்.

தினத்தந்தி

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் செல்லும் சாலையின் குறுக்கே பங்கிங்காம் கால்வாய் செல்கிறது. இதனால் சாலையின் குறுக்கே கால்வாக்காக சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மீது திருப்பத்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்ற லாரி கிளீனர் நேற்று முன்தினம் இரவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தூக்க கலக்கத்தில் பங்கிங்காம் கால்வாயில் விழந்து விட்டதாக தெரிகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் அவரை யாரும் கவனிக்காத நிலையில் படுகாயம் அடைந்த சுரேஷ் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியானார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டுக்கு வராததால் அவரை வீட்டார் மற்றும் அவருடன் வேலை செய்யும் டிரைவர் ஒருவர் தேடினர். அப்போது கால்வாயில் கிளீனர் சுரேஷ் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுரேஷின் உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர் தூக்க கலக்கத்தில் கால்வாயில் விழந்து இறந்தாரா? அல்லது வேறு எதேனும் காரணம் இருக்குமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்