தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் பை-பாஸ்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் மதுரை அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது 54) என்பது தெரியவந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் கிருஷ்ணகுமார் கடந்த 2003-ம் ஆண்டு வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தார். அதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட பிறகு கடந்த 20 அண்டுகளாக கஞ்சா விற்பனையில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் சரக்கு லாரியில் ஆந்திரா சென்று அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து மதுரையில் பல்வேறு பகுதிகளுக்கு சில்லறையாக விற்பனை செய்து வந்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 3 லட்சத்து 30 ஆயிரத்து 620 ரூபாய், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்