தமிழக செய்திகள்

புகையிலைப்பொருள் விற்பனையை தடுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

புகையிலைப்பொருள் விற்பனையை தடுக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசா கைது செய்தனா.

தினத்தந்தி

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது 52) என்பவர் போதையூட்டக்கூடிய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடிக்க முயன்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனை அவர், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 14 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை