தமிழக செய்திகள்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

மார்த்தாண்டம் அருகே நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

4 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு முந்திரி ஆலை அருகில் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கொலை நடந்தது. இந்த கொலை வழக்கில் மார்த்தாண்டம் அருகே உள்ள புத்தன்சந்தை பகுதியை சேர்ந்த சுனில் குமார் (வயது 37) உள்பட 4 பேருக்கும் 2013-ம் ஆண்டு நாகர்கோவில் செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுனில்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் 4 பேருக்கான ஆயுள் தண்டனையை மதுரை ஐகோர்ட்டு கிளை உறுதி செய்தது. இதில் ஜாமீனில் வெளியே வந்த சுனில்குமாரை தவிர மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்தவர் கைது

ஆனால் ஜாமீனில் வெளியே வந்த சுனில்குமார் 9 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பளுகல் மூவோட்டுக்கோணம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த போது சுனில்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை