தமிழக செய்திகள்

திருமணமான இளம்பெண் மாயம்

திருமணமான இளம்பெண் மாயமானார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தை சேர்ந்த காமராசு என்பவரது மகள் கலைமதி (வயது 23). இவருக்கும், வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அன்புசெல்வன் என்பவருக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலைமதி குவாகம் கிராமத்தில் தந்தை காமராசு வீட்டில் தங்கி ஜெயங்கொண்டம் தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற கலைமதி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரிடம் புகார் மனு அளித்தனர். இதன்பேரில் மாயமான கலைமதியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது