தமிழக செய்திகள்

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் மருத்துவ மாணவர் காயம்

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் மருத்துவ மாணவர் காயம் அடைந்தார்.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டம் கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் லெனின் பிரபு (வயது 30). இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் ரேடியோலாஜி இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மருத்துவ கல்லூரி பேராசிரியை ஒருவருடன் அண்ணா சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். சினிமா முடிந்து நள்ளிரவு 2 மணி அளவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் பேராசிரியையை இறக்கிவிட்டு, மோட்டார்சைக்கிளில் மாணவர்கள் விடுதிக்கு செல்ல முயன்றார்.அப்போது அங்கு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 6 பேர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள், லெனின் பிரபுவை வழிமறித்து தகராறு செய்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளை பிடித்து இழுத்து தகாத வார்த்தையில் பேசினர். மேலும் லெனின் பிரபு கன்னத்திலும் அறைந்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லெனின் பிரபு காயம் அடைந்தார். அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்