தமிழக செய்திகள்

சென்னிமலை அருகே மருந்து கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை

சென்னிமலை அருகே மருந்து கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு களிச்சாங்காட்டுவலசை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). இவர் சென்னிமலை குமராபுரியில் கடந்த 6 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் புதிதாக ஒரு மருந்து கடையை திறந்து 6 மாதமாக நடத்தி வந்தார். ஆனால் மருந்து கடையில் போதுமான வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மருந்து கடைக்கு செல்லாமல் செந்தில் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது கழிப்பறைக்கு சென்ற அவர் தனக்குத்தானே மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அதை பார்த்து பதறிப்போய், அவர் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் உடல் கருகிவிட்டது. உடனே செந்திலை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சக்காக அனுப்பி வைத்தனர்.

டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு