தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17-ந் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 17-7-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாறு கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்