தமிழக செய்திகள்

7 நிமிட இடைவெளியில் ஒரு மெட்ரோ ரெயில்

7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பயணிகள் வசதிக்காக இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பராமரிப்புப்பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே  இரு மார்கமாக இன்று 44 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மின்சார ரெயில்கள் ரத்து எதிரொலியாக மாநகர பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு