தமிழக செய்திகள்

மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி மேஸ்திரி பலி

மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி மேஸ்திரி பலியானார்.

ஆரணி

மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி மேஸ்திரி பலியானார்.

ஆரணியை அடுத்த சதுப்பேரி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் சென்னை பூந்தமல்லி பகுதியில் டைல்ஸ் ஓட்டும் மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவரும் இவரது நண்பர் கஜேந்திரன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஆரணிக்கு வந்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தச்சூர் அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த கணேசன் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்து விட்டார்.

இது குறித்து அவரது மனைவி செல்வி, ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்