தமிழக செய்திகள்

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன்மூலம் தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை