தமிழக செய்திகள்

புதிய மயான கொட்டகை கட்டித்தர வேண்டும்

விழல்கோட்டகத்தில் புதிய மயான கொட்டகை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர்:

விழல்கோட்டகத்தில் புதிய மயான கொட்டகை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்த மயான கொட்டகை

கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகம் கிராமத்தில் அப்பகுதியில் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மயான கொட்டகை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மயான கொட்டகை கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் தடுப்பு தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தீவிபத்து

கடந்த சில மாதங்களாக மயான கொட்டகையை அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. மேலும், மயான கொட்டகை பக்கத்திலேயே மூங்கில் மரங்கள் அடர்ந்து சூழ்ந்து வளர்ந்துள்ளது.

இறந்தவர் உடலை எரிக்கும் போது, மூங்கில் மரங்களில் தீவிபத்து ஏற்படுமோ? என்று கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

இதன் காரணமாக் பழுதடைந்த மயான கொட்டகையை பயன்படுத்த முடியாமல் மாற்று இடத்தில் வைத்து இறந்தவர்களை தகனம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மயான கொட்டகையை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக மயான கொட்டகை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்