தமிழக செய்திகள்

குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வட மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தாம்பரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை செய்தபோது அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசுட்டாசெதி (வயது 26), என்பதும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக ரெயில் மூலம் எடுத்து வந்து குன்றத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்