தமிழக செய்திகள்

கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு பைசா உயர்வு! - பெ.சண்முகம்

விவசாயிகளின் விரோதி மோடி அரசு என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிபிஐ(எம்) கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு பைசா உயர்வு!

விவசாயிகளுக்குக் கரும்புக்கான விலையை உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. எவ்வளவு என்றால், கிலோவுக்கு ஒரு பைசா. அதுவும் 10.5% சர்க்கரைச் சத்துள்ள கரும்புக்கு மட்டும்தான்.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரும்பின் சர்க்கரைச் சத்து பத்துக்கும் குறைவாகத்தான் உள்ளது. எனவே, இந்த ஒரு பைசா உயர்வும் பெரும்பகுதி கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்காது என்பதே உண்மை!

விவசாயிகளின் விரோதி மோடி அரசு என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.