தமிழக செய்திகள்

நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவிடம் 'நீட்' தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 85,935 பேர் கருத்துகள் பதிவு

நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவிடம் 'நீட்' தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 85,935 பேர் கருத்துகள் பதிவு.

தினத்தந்தி

சென்னை,

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினரை தமிழக அரசு அமைத்து இருக்கிறது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனை நடத்தியது. நீட் தேர்வு குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யலாம் என்று இந்த குழு அறிவித்தது. அதன்படி, 23-ந்தேதி வரை தங்களுடைய கருத்துகளை தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ பதிவு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டு இருந்தது. அந்தவகையில், நேற்று முன்தினத்துடன் அந்த அவகாசம் முடிந்த நிலையில், 85 ஆயிரத்து 935 பேர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களுடைய கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்துள்ளனர்.

குழுவின் அடுத்த கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் ஆராயப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை