தமிழக செய்திகள்

ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்றவரை தாக்கி பிளாட்டினம் சங்கிலி பறிப்பு

ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்றவரை தாக்கி பிளாட்டினம் சங்கிலியை பறித்து தப்பியோடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் முதலாவது தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 40). இவர், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள், பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த வைர கற்கள் பதிக்கப்பட்ட பிளாட்டினம் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

பிரபு அதை தடுக்க முயற்சித்தபோது, அவரை தாக்கி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் சங்கிலியை பறித்துவிட்டு அந்த ஆசாமிகள் தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரபு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளாட்டினம் சங்கிலியை பறித்து தப்பியோடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து