தமிழக செய்திகள்

அனைத்து பிராந்தியத்திலும் நிரந்தர சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஏற்படுத்த வேண்டும்

அனைத்து பிராந்தியத்திலும் நிரந்தர சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஏற்படுத்த வேண்டும் நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் பேச்சு.

சென்னை,

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா 2021 குறித்த விவாதத்தின்போது, மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறன் பேசியதாவது:-

ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது 62 எனவும். அதுவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு 65 வயது எனவும் பாகுபாடு காட்டுவது ஏன்? ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது உச்சவரம்பு ஏன்? பொதுவான ஒன்றாக இருக்கக்கூடாது. ஓய்வு பெறுவதற்கான வயது உச்சவரம்பு வயது 65 அல்லது 67 என பொதுவான வயதை நிர்ணயித்து ஏன் ஒரு தனி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யக்கூடாது.

தி.மு.க.வின் சார்பாக நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளது. அதாவது அனைத்து பிராந்தியத்திற்கும் என நிரந்தர சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு