தமிழக செய்திகள்

மொபட்டுகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலி

மொபட்டுகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் குறவன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 70). கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு சென்று மூங்கில் வாங்கிவைத்து மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நாட்டறம்பள்ளி ஏரிக்கோடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நாட்டறம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரி சீரண் வட்டம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவர் மொபட்டில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மொபட்டுகளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்