திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சின்னூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பரமசிவன் என்பவரது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருட முயன்றுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஒருவர் வீடு புகுந்து திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.