தமிழக செய்திகள்

டிரைவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவர்

கத்தியை காட்டி பிளஸ்-2 மாணவர் கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தினத்தந்தி

கலசபாக்கம்

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அரசு பஸ்வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் காஞ்சி வந்ததும் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏறி உள்ளனர்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால்படிக்கட்டின் கதவுகளை டிரைவர் சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அரசு பஸ் டிரைவரிடம் சென்று ஏன் படிக்கட்டின் கதவு திறக்காமல் மூடினாய் என்று கேட்டு ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி கொலை செய்து விடுவதாக டிரைவரை மிரட்டி உள்ளர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் பள்ளியின் அருகே உள்ள சாலையில் பஸ்சை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ் டிரைவரை சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்சில் ஏற முடியாதபடி சய்ததால் கத்தியை காட்டி டிரைவரை பிளஸ்-2 மாணவர் மிரட்டியதும், ப்சை குறுக்காக நிறுத்தி டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்