தமிழக செய்திகள்

திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியர்; போக்சோ சட்டத்தில் கைது

திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்த தனியார் பள்ளி ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்ற எட்வின் (வயது 21) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவியிடம் சசிகுமார் பேசி கொண்டிருப்பதை கண்ட பள்ளியின் முதல்வர், சசிகுமாரின் செல்போனை வாங்கி சோதனை செய்தார்.

அதில் அந்த மாணவியின் ஆபாச படங்களை செல்போனில் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு