தமிழக செய்திகள்

ஐம்பொன் சிலைகள், செப்பேடுகளை அப்புறப்படுத்தினால் போராட்டம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகளை அப்புறப்படுத்தினால் போராட்டம் பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் அறிவிப்பு

தினத்தந்தி

சீர்காழி:

பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை இந்த கோவிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். மாறாக கோவிலில் இருந்து சிலைகளை அப்புறப்படுத்த நினைத்தால் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகளை விரைவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து பார்வையிட உள்ளார். தருமபுரம் ஆதீனம் பழமையான ஆதீனம் எனவே அரசு கோவில் வளாகத்திற்குள்ளேயே சிலைகளை பாதுகாப்பாக வைத்து ஆய்வு பணியை மேற்கொள்ளலாம் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.அப்போது பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்