தமிழக செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகத்தில் சாரைப்பாம்பு பிடிபட்டது

சார்பதிவாளர் அலுவலகத்தில் சாரைப்பாம்பு பிடிபட்டது

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகத்தின் மேற்கூரை வழியாக பாம்பு ஒன்று உள்ளே நுழைய முயன்றது. இதை கண்டபொதுமக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மேற்கூரையில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 5 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை பொள்ளாச்சி வனத்துறையினரிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை