தமிழக செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு

செட்டிகுளத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் குரூர் செல்லும் சாலையில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரிய நிகழ்வாக ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசி மாதத்தில் 6, 7, 8-ந்தேதிகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மூலவர் காசிவிஸ்வநாதர் மீது சூரிய ஒளிக்கதிர் விழுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் மாசி மாத 6-ந்தேதியான நேற்று முன்தினம் மாலையிலும், 7-ந்தேதியான நேற்று மாலையிலும் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மாலையிலும் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்