தமிழக செய்திகள்

லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் ஜோதிலிங்கேஸ்வரர் சமேத கும்பாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய கதிர் வீச்சு விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. ஆண்டுதோறும் ஆவணி பவுர்ணமி நாளின் முதல் நாளில் இருந்து வருகிற 15-ந் தேதி வரை ஒரு வார காலம் லிங்கத்தின் மீது அதிகாலை காலை 6 மணிக்கு தொடங்கி 20 நிமிடங்கள் சூரிய கதிர்கள் விழுகின்றன. இந்த அறிய நிகழ்வு பற்றி வேதாந்த மடத்தின் மடாதிபதி மாதவ குமாரசாமி கூறும்போது, ஆவணி மாதம் ஒரு வார காலம் இந்நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடம் தெளிவாக அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்றார். இந்த நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது