சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மனிதகுல வரலாற்றில் நினைத்தாலே நெஞ்சை நடுங்கச் செய்வதாக முள்ளி வாய்க்கால் தமிழினப் படுகொலை உள்ளது. 2009-ம் ஆண்டு அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 7 அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் சிங்கள அரசு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன், ஆயிரம் ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்தது.
இதுவே முள்ளி வாய்க்கால் படுகொலை ஆனது. தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 வாலிபர்கள் இக்கொடுமையை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்தனர். எனவே, சுதந்திரத் தமிழீழம் காண ஈழத்தமிழர்களிடம் ஐ.நா.வின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.